தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வினை வழங்கப்போவதில்லை

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வினை வழங்கப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதனை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர் இதன குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது.

கடந்த 70 ஆண்டுகளில் இந்த நாட்டில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் மக்களை ஏமாற்றியே வந்துள்ளன. அது போலவே தற்போதைய அரசாங்கமும் சமாதானம் பேசிக்கொண்டு தம்மை ஏமாற்றி வருவதாக தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தலைவர்களோ அமைச்சர்களோ இதய சுத்தியுடன் சமாதானம் தொடர்பில் பேசுவதில்லை, மாறாக தேசிய அரசாங்கத்தை காப்பாற்றும் நோக்கத்திலேயே செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த அரசாங்கம் நிகைத்திருந்தால் பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் என தமிழ் மக்களும் சர்வதேச சமூகமும் எதிர்பார்த்திருந்தன.

இதேவேளை, இராணுவ கட்டமைப்பிற்குள் தமிழ் மக்களை தொடர்ந்தும் வைத்திருக்க அரசாங்கம் விரும்புகின்றதா என அவர் இதன்போது கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply