அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புதிய கட்டட தொகுதி திறந்து வைப்பு

கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனைப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டட தொகுதி இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என்ற கொள்கையின் அடிப்படையில் பத்து இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய கட்டிட தொகுதி பராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பூநகரி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலரும் கிளிநொச்சி மாவட்ட உதவி தேர்தல் ஆனையாளருமான அமல்ராஜ் மற்றும் பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கௌதாரிமுனை கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply