பாராளுமன்ற உறுப்பினர் சீறிதரன் நெடுந்தீவுக்கு விஜயம்- அங்குள்ள தற்போதைய நிலைமைகளையும் நேரில் பார்வையிட்டார்

யாழ் நெடுந்தீவு பகுதிக்கு நேற்று முந்தினம் (02-01-2017)விஜயம் செய்;த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் அங்குள்ள நிலமைகளையும் பார்வையிட்டுள்ளார்.

நேற்று முந்தினம் (02-01-2017) யாழ் நெடுந்தீவுக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் புனரமைக்கப்பட்டுள்ள வடக்குறாவெளிக்குளத்தினை பார்வையிட்டுள்ளதுடன் நெடுந்தீவு வைத்தியசாலையின் தற்போது நிலமைகள் தொடர்பிலும் அதனை பார்வையிட்டுள்ளதுடன் பொதுமக்களுடன்; கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை இப்பகுதி மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் நெடுந்தீவு பிரதேசத்தின் தேவைகள் குறித்தும் வசதிகள் குறித்தும் அதற்கான தேவைகளை நிறைவு செய்து தருமாறும் தமது கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

img_3460 img_3461 img_3463 img_3524 img_3527
Leave a Reply