மலரும் புத்தாண்டு அனைவருக்கும் தளராத நம்பிக்கையை தரட்டும்

மலரும் புதுவருடம் அனைவருக்கும் தளராத நம்பிக்கையையும், அமைதியையும் தருவதாக அமைய வேண்டும்

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய உறவுகளே! பிறக்கப்போகும் 2017 புதிய ஆண்டு உங்கள் அனைவருக்கும் நல்லவை அனைத்தையும் அருளட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

2016ம் ஆண்டு தமிழ் மக்கள் எதிர்பார்திருந்த அமைதியும் சமத்துவமும் மிக்க அரசியல் தீர்வு ஏற்படாததால் உருவாகிய மன உளைச்சல்கள் நம்பிக்கை இன்மை எல்லாம் நீங்க வேண்டும்.

எமது விடுதலைக்காக விதையுண்டு போன பல்லாயிரக்கான உயிர்களின் மேல் உறுதியாக சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் நீடித்து நிற்க கூடிய அரசியல் தீர்வு அடைய வேண்டும்.

அத்தகைய பாதையில் தளராத நம்பிக்கையோடு ஒன்றுபட்ட சக்தியாக பயணிப்பதற்கு உரிய திடசங்கட்ப்பத்தை எமது மக்களும் எமது தலைவர்களும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று

பிரார்த்தித்தவனாக உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்லவாழ்த்துக்களை மனநிறைவோடு பகிர்ந்து கொள்கிறேன்.
Leave a Reply