ஆழிப்பேரலை 12ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் உடுத்துறையில் நடைபெற்றது .

ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 12ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த அனுஷ்டிப்பு சுனாமி நினைவுக்குழுவின் தலைவர் தலைமையில் இன்று காலை ஆரம்பமானது.

இதன்போது, முதலில் பொது நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

மலர் மாலையினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அணிவித்தார்.

இதன் பின்பு ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களுக்கான நினைவுரைகள் இடம்பெற்றது.
Leave a Reply