நல்லாட்சி அரசாங்கத்தை நாங்கள் எதிர்க்கவில்லை.

யுத்தம் முடிவுற்று ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. எங்களுடைய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நாட்டின் ஜனாதிபதி பதவியையோ அல்லது பிரதமர் பதவியைப் பெறுவதற்கான எதிர்க்கட்சியாகவோ இருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கோண்டாவிலில் இயங்கி வரும் மக்கள் நலன் பேணும் அமைப்பின் ஏற்பாட்டில் நான்காவது ஆண்டு நிறைவு விழாவும், உதவித் திட்ட நிகழ்வும் இன்று சனிக்கிழமை(17) பிற்பகல் கோண்டாவில் ஆசிமட அரசடி விநாயகர் ஆலய திருமண மண்டபத்தில் அமைப்பின் தலைவர் செ.ஜெகபாலன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாங்கள் எவ்வளவு தான் விழாக்களைக் கொண்டாடினாலும், கட்டிடங்களைக் கட்டினாலும் எங்களுக்கான நிரந்தரமான வாழ்வியல் உரிமைகள் கூட இன்னமும் வழங்கப்படவில்லை.

வரலாற்று ரீதியான, சரித்திர பூர்வமான எங்களுடைய தாயக பூமியான வடக்குக் கிழக்கில் நிரந்தரமான, கெளரவமான அரசியல் தீர்வை, வாழ்வியல் உரிமையைப் பெற்றுக் கொள்கின்ற உறுதியோடு தான் எங்களால் முடியுமான ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளோம்.
Leave a Reply