கோல்பேசில் கோவில் கட்ட முடியுமா..?

இந்து கோயில்கள் மற்றும் விகாரைகள் தொடர்பில், ஜே.வி.பி.யின் எம்.பி.யான விஜித ஹேரத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான ஸ்ரீதரனுக்கும் இடையில், கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தில் தற்போது, புத்தசாசன அமைச்சின் மீதான விவாதம், இடம்பெற்று கொண்டிருக்கின்றது. இதன்போதே, இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வடக்கில் புதிதாக பௌத்த விகாரைகள் முளைக்கவில்லை என்று விஜித எம்.பி சுட்டிக்காட்டிபோது குறுகிட்ட ஸ்ரீதரன் எம்.பி, “வாங்க, வாங்க லீவு போட்டுட்டு வாங்க, நாங்கள் கூட்டிக்கொண்டு போகிறேன்” என்று தெரிவித்தார்.

“வடக்கில் ஹிந்து – பௌத்தர்கள் இருந்தனர். கிளிநொச்சியில் ஒரேயொரு விகாரை மட்டுமே இருந்தது. இன்று விகாரைகள் முளைக்கின்றன” என்று சுட்டிக்காட்டியதுடன்.

“வெள்ளவத்தையில் காணியைப் பெற்று கோயில் கட்டலாமா? அல்லது கோல்பேசில் (காலிமுகத்திடலில்) கோயில்தான் கட்டலாமா?” என்றும் கேட்டார்.

“விகாரைகள் வடக்கில் புதிதாக நிர்மாணிக்கப்படவில்லை. எனினும், விகாரைகளை கட்டமுடியாது என்று வடமாகாண முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது உசித்தமானது அல்ல. அதேபோல, மேல்மாகாண முதலமைச்சர், விகாரைகளை நிர்மாணிப்போம் என்றொரு தீர்மானத்தை நிறைவேற்றினால் என்ன நடக்கும்?” என்றும் கேள்வியெழுப்பினார்.
Leave a Reply