தாயகத்து உறவுகளுக்கு கனடா மொன்றியல் அமைப்பு ஊடாக புலம்பெயர் தேசத்து மக்களின் உதவிகள்

இறுதி யுத்தத்தில் பல இன்னல்களை சந்தித்து தங்களின் வாழ்வை நடத்த முடியாத நிலையில் இருக்கும் ஈழத்து உறவுகளின் துயர் துடைக்க புலம்பெயர் தேசத்து வாழ் ஈழத்தமிழ் மக்கள் மனிதநேய பணிகள் செய்து வருகின்றார்கள்.

அதன் ஒரு படியாக கனடா வாழ் தமிழ் உறவுகளினால் கிளிநொச்சி மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் வறிய நிலை மாணவர்களின் கல்வியை உயர்த்தும் நோக்குடனும் கனடா மொன்றியல் அமைப்பு ஊடாக அண்மையில் வாழ்வாதார உதவி திட்டங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய கனடா மொன்றியல் அமைப்பு ஊடாக ஈழத்தமிழ் உறவுகளான தனபாலசிங்கம் ரமேஸ் என்பவரினால் கிளிநொச்சி ஜெயந்திநகரில் வசிக்கும் முன்னாள் போராளியான விஜயகுமார் மேரிபிலோமினா என்பவருக்கு ரூபா 75000 பெறுமதியான வளர்ப்பு பசுமாடும்,canada_help_sri001

காந்தன் வில்வரட்டினம் என்னும் ஈழத்து தமிழ் உறவினால் ரூபா 75000 பெறுதியான ஐந்து பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளும்,

வன்னேரிக்குளத்தில் வசிக்கும் பரமநாதன் மல்லிகாதேவி என்பவரின் விவசாய நடவடிக்ககைகளுக்காக நமச்சிவாயம் பாலாம்பிகை நினைவாக அவரது மகன் நித்தியானந்தனினால் ரூபா 65000 பொறுதியான குளாய் கிணறு மற்றும் அதற்கான மின்னியல் நீர் இறைக்கும் இயந்திரம் என்பனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களால் அண்மையில் கிளிநொச்சி அறிவகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.canada_help_sri002

இந்த உதவித்திட்டத்தை வழங்கி வைத்த பின்னர் கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், இவ்வாறான உதவிகளை உங்களுக்கு புலம் பெயர் தேசத்து ஈழத்தமிழ் உறவுகள் வழங்குவதற்கு முன்வந்துள்ளமையையிட்டு முதலில் நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டவர்களாக இருக்கவேண்டும்.canada_help_sri003

இரவு பகல் என்று பாராது தங்கள் உழைப்பின் ஒரு பகுதியை எங்களுக்கு உதவி புரிய வேண்டும் என்ற மனநிலையோடு உள்ளார்கள்.

இன்று உங்களுக்கு வழங்கப்படும் இந்த உதவிகளை கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் உறவுகளான தனபாலசிங்கம் ரமேஸ், காந்தன் வில்வரட்டினம், நித்தியானந்தன் ஆகியோர் கனடா மொன்றியல் அமைப்பு ஊடாக உதவியை செய்துள்ளார்கள்.canada_help_sri004

எனவே நீங்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாக இந்த உதவிகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்விற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை மற்றும் அருட்தந்தை அமலதாஸ், உதவித்திட்டத்தை பெறும் பயனாளிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply