கிளிநொச்சியில் குருகுல பிதா அப்புஜீயின் நூற்றாண்டு விழா

குருகுல பிதா என அழைக்கப்படும் அப்புஜீயின் நூறாவது ஜனனதின நிகழ்வும், உருவச்சிலை திறப்பும் கிளிநொச்சியில் இன்று வௌ்ளிக்கிழமை (21) உதவி திட்டமிடல் பணிப்பாளர் அ. கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டதோடு, கிளிநொச்சி இந்துக்கல்லூரி மண்டபத்தில். “நினைவழியாப் பெருமனிதன்” என்னும் நூல் வெளியீட்டு விழாவும் இடம் பெற்றுள்ளது.

எம்முடன் இந்த விழாவில், தவத்திரு மகாதேவ சுவாமிகள், மற்றும் திரு சிவபூமி தலைவர் ஆறுதிருமுகன் மாகாண சபை உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் போன்றோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

அத்தோடு பசுபதிப்பிள்ளை மகாதேவ சைவச்சிறுவர் இல்லத்தலைவர் இராசநாயகம், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் றுபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன், வலயக் கல்விப்பணிப்பாளர் க. முருகவேல், ஆசிரியர் பயிற்சி கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன், பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கல்வியலாளர்கள் பெரியோர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

kilinochi_function003 kilinochi_function005
Leave a Reply